இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லலாம்?
Answer
Shall I? or shall we? என்பதை நாம் opinion, advice அல்லது suggestion கேட்க பயன் படுத்துகிறோம்.
காலத்தை குறிக்கும் சொற்கள் முன் Preposition உபயோகிக்க வேண்டும். Days மற்றும் Dates என்றால் “on” உபயோகிக்க வேண்டும்.
Examples
I met him on 21st July 1998.
He will come on Monday.
அதுவே last, next, this, that போன்ற வார்த்தைகளுக்குப் பிறகு காலத்தை குறிக்கும் சொற்கள் வந்தால் preposition உபயோகிக்கக்கூடாது.
Examples
We are going to Chennai next week.
Raju met Malini last summer.