நான் கடந்த மூன்று வருடங்களாக இந்த நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன்.

Jun 15, 2022

நான் கடந்த மூன்று வருடங்களாக இந்த நிறுவனத்தில் வேலை செய்து வருகிறேன்.

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லுவீங்க?

Answer

I have been working in this firm for the last/ past three years.

ஒரு செயல் கடந்த காலத்தில் தொடங்கி, அது நிகழ்காலத்தில் நடந்து கொண்டு இருந்தால் அதை நாம் (Subject + have/has been + Main verb + ing) என்ற structure கொண்டு வாக்கியத்தை அமைப்போம்.

He/She/It அல்லது any singular noun- ஐ subject ஆக உபயோகப்படுத்தினால் “has” பயன்படுத்தவும்.

I/we/you/they அல்லது any plural noun ஐ subject ஆக உபயோகப்படுத்தினால் “have” பயன்படுத்தவும்.

She has been writing for two hours.
He has been playing since morning.
I have been watching TV since 4:00 p.m.
They have been cooking since 7 o’clock