நீங்க எப்படி அப்படி சொல்லலாம்?

Jun 07, 2022

நீங்க எப்படி அப்படி சொல்லலாம்?

இதை எப்படி இங்கிலீஷ்ல சொல்லலாம்?

*Answer*

How could you tell like that?

இங்கே “Could” என்பது முடிந்த ஒன்றைப்பற்றி கேட்பதாக பயன்படுத்தப் பட்டிருக்கிறது. அதாவது “Past tense” இல் பயன்படுத்தப்பட்டிருக்கிறது.

“Could”என்பதை “Present tense” லும் உபயோகப்படுத்தலாம்.

கோரிக்கைகளுக்கு  ,”Can” or “Could” பயன்படுத்தப்படுகிறது.

நாம் யாரையாவது ஏதாவது செய்யச் சொல்லும்போது, நம் கேள்விகளில் “can you please” என்ற வாக்கிய அமைப்பை அடிக்கடி சேர்க்கிறோம். இது மரியாதைக்குரியதாக இருக்க “Could you please” பயன்படுத்தப்படலாம். இது இங்கிலீஷ்ல ஃபார்மல் முறை என்று அழைக்கப்படுகிறது.

Could you please tell me where the bank is?